கொக்கல, கபலானை, கதலுவ,
வைல்ஹேங்கொட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (03) பிற்பகல் கடல் அலைகள் காலி - மாத்தறை பிரதான வீதிக்கு வந்ததால் அவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டன.
வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், கொக்கல டிப்போவுக்கு அருகிலுள்ள கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் அலைகளுடன் வீதிக்கு அடித்து வரப்பட்டன.