கொழும்பிலிருந்து பதுளை
நோக்கி பயணித்த 1007 இலக்க அதிவேக ரயில் கொட்டகலை - ஹட்டன் ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (3) மாலை தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக மலையக ரயில் பாதையில் பதுளைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையில் இயங்கும் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயிலின் கண்காட்சிப் பெட்டியும் ரயில் பாதையும் சேதமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.