பிரபஞ்சம், மூச்சுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது

தவறு என்றும், இவ்வாறு பகிர்ந்தளிப்பதால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றும், பகிர்வது அரசியல்வாதிகளின் பொறுப்பல்ல என்றும், உள்ளவர்களிடம் இருந்து பெற்று, இல்லாதவர்களுக்கு கொடுப்பது தவறு என பொறாமைத்தன மனப்பாங்கு கொண்ட சிலர் கூறி வருகின்றனர்.

இவ்வாறு வெறுமனே விமர்சிப்பவர்களுக்கு நாட்டில் உள்ள பாடசாலைகளின் தேவைப்பாடுகள் குறித்து சரியான புரிதல் இல்லை. சில பாடசாலைகளில் ஆசிரியர்களின் தனிப்பட்ட கணினியைப் பயன்படுத்தி தகவல் தொழில்நுட்ப பாடம் கற்பிக்கப்படுகிறது. இவ்வாறான நிலையில், இந்த வளங்களை பகிர்ந்தளிப்பது எவ்வாறு தவறாகும் என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

உலகம் சுற்றி அலைந்து, தங்கள் கட்சி நிதியத்துக்கு கோடி கோடியாக பணத்தை திரட்டி வரும் இந்த காட்போர்ட் சோசலிசவாதிகள், குறித்த நிதியில் ஒரு சிறு பகுதியையேனும் கூட நாட்டின் கல்வியின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவதில்லை.

இந்த வங்குரோத்து நாட்டில் மாற்றுத் தலைவர்கள் என பெரும் எடுப்பாக கூறிக்கொள்ளும் நபர்கள், உலகம் சுற்றி அலைந்து திரிந்து பணம் திரட்டி, அந்த பணத்தைப் பயன்படுத்தி தங்கள் இமேஜை கட்டியெழுப்புகின்றனர். மக்களின் துன்பங்களுக்கு முடிவு கட்டவோ, நாட்டை அபிவிருத்தி செய்யவோ அவர்கள் விரும்பவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனவே நாட்டுக்குத் தேவை பேச்சு அல்ல, செயல் என்பதை இந்நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வெற்று அரசியல் நிகழ்ச்சிகளை விடுத்து நாட்டுக்கு நடைமுறை ரீதியிலான அபிவிருத்தித் திட்டங்களே தேவை. அதிகாரம் இல்லாமலயே ஐக்கிய மக்கள் சக்தி மக்களுக்காக இந்தக் கடமையை நிறைவேற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 213 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, முல்கிரிகல, கட்டுவன குடாகொட கனிஷ்ட வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மே 31 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, இப்பாடசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

ஸ்மார்ட் பாடசாலைகள் எமது நாட்டுக்குத் தேவையில்லை என்று கூறிவரும் காட்போர்ட் சோசலிசவாத வாய்ச் சொல் தலைவர்களின் பிள்ளைகள் சர்வதேச பாடசாலை, தனியார் பாடசாலை, தனியார் பல்கலைக்கழகங்களிலயே தமது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அவர்களின் சோசலிசம் குறித்த பேச்சுக்களும், பாட்டாளி வர்க்கம் குறித்த பேச்சுக்களும் வெறும் பேச்சுக்களே. பேச்சில் உள்ளவை செயலில் இல்லை. திருடர்களை பிடிப்போம் என்று இந்த சோசலிசவாதிகள் காலாகாலமாக தம்பட்டம் அடித்தாலும், எதிரணியில் இருந்து வரும் ஐக்கிய மக்கள் சக்தி, திருடர்கள் யார் என்பதை தற்போது வெளிக்கொணர்ந்துள்ளது. எனவே நாட்டுக்கு செயல் ரீதியிலான அரசியல் முன்னெடுப்பே தேவை என்பதை மக்கள் புத்திசாலித்தனமாக புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி