ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை ஒத்திவைப்பது
தொடர்பான கருத்தை தெரிவிக்குமாறு ஐக்கிய தேசியக் செயலாளர் ரங்கே பண்டாரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே கோரியிருப்பதாக அறிய முடிகிறது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணிலின் கயிற்றை விழுங்கிய ரங்கே பண்டாரவை கட்சி செயலாளர் பதவியிலிருந்து நீக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே போராட்டங்கள் இப்போது வெடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு ரவி கருணாநாயக்க கொண்டுவரப்படவுள்ளார். பொதுச் செயலாளரின் அறிக்கையால் ஐ.தே.க.வினர் கூட வீதியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
தேர்தல்கள் ஒத்திவைப்பு என்பது ரணில் விக்கிரமசிங்கவினால் கூட செய்ய முடியாத காரியம். அவர் அவர் செய்தால் இன்னொரு அரகல மூலம் அவரும் பதவியிலிருந்து வெளியேறும் நிலைமை உருவாகலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.