சாய்ந்தமருது மக்களுக்கு

வாழ்வாதார உதவிகளை வழங்கப் போவதாகவும் - அதற்கான பெயர்ப்பட்டியலை தருமாறு என்னிடம் கேட்ட ஹரீஸ் எம்பி , அதற்கு மாற்றமாக " யஹியாகான் பௌண்டேஷனுக்கு " நிதி ஒதுக்கியமைக்கு காரணம் என்ன ? 

அவ்வாறான நிதி எனக்கோ அல்லது எனது பௌண்டேஷனுக்கோ வேண்டாம். அதனை அவரோடு இருப்பவர்களுக்கு வழங்குமாறு கூறி நிராகரித்து விட்டேன்.
 
இவ்வாறு - முஸ்லிம் காங்கிரஸின் பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் தெரிவித்தார்.
 
ஹரீஸ் எம்பியின் வேண்டுகோளின் பேரில் அவரது செயலாளர் - இந்த வாழ்வாதார பெயர்ப் பட்டியலை வற்புறுத்தி பெற்றுக் கொண்டார். 
 
நானும் - மக்களை தெரிவு செய்து தையல் இயந்திரம் மற்றும் இதர வாழ்வாதார உபகரணங்களையும் உள்ளடக்கிய பெயர்ப்பட்டியலை அனுப்பி வைத்தேன். ஆனால், அவற்றை நிராகரித்து விட்டு எனது பௌண்டேஷனுக்கு நிதி ஒதுக்கியுள்ளார்.
இதனை அவதானித்த போது பெரும் ஆச்சரியமும் ஆத்திரமும் அடைந்தேன்.
 
14 வருடங்களாக - எனது சொந்த நிதியில் செயற்பட்டு வரும் யஹியாகான் பௌண்டேஷனுக்கு - நான் யாரிடமும் கையேந்தியது கிடையாது. ஹரீஸ் எம்பி கூட அவர் வகித்த அமைச்சின் ஊடாகவோ அல்லது இவ்வாறான பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு மூலமாகவோ ஒரு சதமேனும் ஒதுக்கித் தராத இவர் - இப்போது , இரண்டரை இலட்சம் ரூபா ஒதுக்கியிருப்பது என்னை அவமானத்துக்குள்ளாக்க எடுக்கப்பட்ட முயற்சியாகவே பார்க்கிறேன்.
 
யஹியாகான் பௌண்டேஷனை எந்தவொரு நபராலும் மழுங்கடிக்க இடமளிக்கமாட்டேன் என்பதை ஹரீஸ் எம்பிக்கு கூறிவைக்க விரும்புகிறேன். எனது பௌண்டேஷனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை உங்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுங்கள்.
 
பண விடயத்தில் நான் போதுமானளவு நிதியை வைத்துள்ளேன். இவ்வாறான நிதிகள் எனக்கு வேண்டாம். 
 
கடந்த 14 வருடங்களாக உங்கள் அரசியல் நடவடிக்கைகளுக்கு நான் நிறைய பண ரீதியான உதவியை செய்திருக்கிறேன். அப்படிப்பட்ட எனக்கு , எனது பௌண்டேஷனுக்கு  இந்த  இரண்டரை இலட்சம் ரூபா எதற்கு என்று கேட்க விரும்புகின்றேன். உங்களை -  பணத்துக்காக துதி பாடுவோருக்கு இந்த தொகையை பிரித்துக் கொடுங்கள். 
 
அத்துடன் , குறித்த நிதியை நிராகரித்தமைக்கான கடிதத்தை சாய்ந்தமருது பிரதேச செயலாளருக்கும் அனுப்பி வைத்துள்ளேன் என்றும் யஹியாகான் தெரிவித்தார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி