ஜனாதிபதி தேர்தல் முறைப்படி நடத்தப்படவேண்டும். எனினும் 

ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் மேலும் ஐந்து வருடங்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கொடுக்கப்பட வேண்டுமென ரங்கே பண்டார கூறியிருந்தார்.

இலங்கையில் அவ்வாறு செய்வதற்கு இனிமேலும் இடமில்லை என  நான் ரங்கே பண்டாரவுக்கு  வலியுறுத்திக் கூறுகிறேன். அதேபோலவே வேறு எந்த வேட்பாளரையும் போட்டியிட இடமளிக்காமல் ரணில் விக்கிரமசிங்கவை மாத்திரம் இடமளிக்குமாறு வஜிர அபேவர்தன கூறுகிறார். 

அதாவது தேர்தலில் ரணிலால் வெற்றிபெற முடியாதென்பதை அவர்கள் அறிவார்கள். அதைப்போலவே சஜித் பிரேமதாசவின் கூட்டங்களில் கோமாளிகள் இருப்பதுபோல் உணரப்படுகின்றது. இலங்கையின் ஒட்டுமொத்த அரசியலும் தற்போது தேசிய மக்கள் சக்தியை மையப்படுத்தியதாக நிலவுகின்றது. 

இதற்கு முன்னர்  பொறுப்பினை ஈடேற்ற, நன்றிக்கடன் செலுத்த எனக்கூறி பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு கட்சிகளுக்கு வாக்களித்த  பெரும்பாலானோர் இங்கு குழுமி இருக்கிறார்கள். இதுவரை ஏனைய கட்சிகளுக்கு வாக்களித்த பெருந்தொகையானோர் எம்முடன் இணைந்துள்ளதாலேயே தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறுகின்றது. இதற்கு முன்னர் பாரியளவில் அரசியல்மீது அக்கறை செலுத்தாதவர்களும் வேறு கட்சிகளுக்கு வாக்களித்தவர்களும் ஏன் எம்மைச் சுற்றிக் குழுமி இருக்கிறார்கள்?  

பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியைப் பெற்றுக்கொடுக்கவே எவரும் மிகவும் அதிகமாக முயற்சி செய்கிறார்கள். எனினும் தற்போது பாடசாலைக் கல்வியை சீரழித்து, ரியுஷன் கல்விக்காக பாரிய சுமையை தாங்கிக்கொள்ள வேண்டியநிலை அவர்களுக்கு எற்பட்டுள்ளது.   பிள்ளை கல்வி கற்பது தற்போது வீட்டுக்கு சுமையாக மாற்றப்பட்டுள்ளது. 
பிள்ளைகளுக்கு சரியான கல்வியை பெற்றுக்கொடுப்பது பெற்றோருக்கு பாரிய சுமையாக விளங்குகின்றது. அந்த சுமையிலிருந்து உங்களை விடுவித்து  அரசாங்கத்தின் பொறுப்பாக மாற்றுவோமென நாங்கள் உறுதியாகக் கூறுகிறோம். நாட்டை மீட்டெடுத்திட வேண்டுமாயின் முன்னேற்றமடைந்த மனித வளம் அவசியம். இந்த நாட்டை  சீராக்க வேண்டுமானால்  அறிவும் பண்பும் நிறைந்த பிள்ளைகள் தலைமுறையொன்று எமக்குத் தேவை. 

அதனால் இற்றைவரை அரசாங்கங்கள் ஈடேற்றியிராத மிகப்பெரிய செயற்பொறுப்பினை நாங்கள்  எற்றுக்கொள்கிறோம். அடுத்ததாக பிள்ளைகளுக்கு நல்ல தொழில் தேவை. உண்மையைக் கூறுவதானால் தேவைப்படுவது நல்ல தொழிலல்ல: நல்ல வருமான வழிவகையாகும். எனினும் பெற்றோர்களையும் வளர்ந்த சூழலையும் கைவிட்டு எப்படியாவது வெளிநாட்டுக்குச் செல்லவே தற்போது இளைஞர்கள் முயற்சி செய்கிறார்கள். 

அதனால் பெற்றோர்கள் நிர்க்கதிநிலையில் இருக்கிறார்கள். சிறந்த வருமான வழியைத் தேடிக்கொள்வதற்கான முறையான வாய்ப்பு கிடையாது. அவர்கள் கொழும்பில் கொங்கிறீட் கலவைசெய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றபோது போதைப்பொருட்களுக்கு அடிமையாகிறார்கள். தற்போது ஊர்கள்தோறும் போதைப்பொருட்கள் வியாபித்து விட்டன. அவற்றிலிருந்து பிள்ளைகளை மீட்டெடுத்து  பெற்றோர்கள் அச்சமும் சந்தேகமும் இன்றி பிள்ளைகளுக்கு எதிர்காலத்தை நிர்மாணித்துக் கொடுக்கின்ற பொறுப்பினை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

 அடுத்ததாக எமது மிகப்பெரிய எதிர்பார்ப்பு வீடு, வாசலை அமைத்துக்கொள்வதே. நனையாமல் இருப்பதற்காக  கூரையொன்றை அமைத்துக்கொள்வோம் என்றே முன்னர் கூறினார்கள். ஆனால் இன்றளவில் பல தலைமுறையினர் வசிப்பதோ முழு வாழ்நாளிலும் மல்லுக்கட்டினாலும் அரைவாசி அமைத்துக்கொண்ட வீட்டில் தான்.  அதனால்  இந்த நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும்   நனையாமல், நல்ல காற்றோட்டம் நிலவுகின்ற வீடொன்றை அமைத்துக் கொடுப்பதற்கான பொறுப்பினை எங்கள் அரசாங்கம்  ஏற்றுக்கொள்கிறது. 
அத்துடன் இன்றளவில் சனத்தொகையில் நூற்றுக்கு நாற்பத்தெட்டு வீதமானோர் தொற்றா நோய்களுக்கு இரையாகி  இருக்கிறார்கள். அவர்களை அவற்றிலிருந்து மீட்டெத்து ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம். இந்த பேரழிவிலிருந்து மக்களை விடுவித்துக் கொள்கின்ற  சாதகமான சுகாதார பழக்கவழக்கங்கள், சிறந்த உணவுவேளையொன்றை வழங்குதல், தரமான மருந்துகளை வழங்குதல் மற்றும் சுகாதார ஆராய்ச்சிகளை முறைப்படி மேற்கொள்ளல்  அரசாங்கத்தின் பொதுவான பொறுப்பாக ஏற்றுக்கொள்வோம். 

சிசுவை வயிற்றில் சுமந்துள்ள தாய் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளமை இன்றைய நிலைமையாகும். அதனால் பிள்ளையும்  தாயும் இருவருமே நோயாளியாகி இருக்கிறார்கள். இதனால் பிரஜைகளுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவுவேளையொன்றை வழங்கி, ஆரோக்கியமான வாழ்க்கையின் முதலாவது  அவசியப்பாட்டினை நிறைவுசெய்வோம். 

தற்போது  எழுபத்தைந்து வயதாகின்ற திருவாளர் ரணில் விக்கிரமசிங்கவினதும் அதே வயதுடைய எமது ஊரிலுள்ள தகப்பனதும் நிலைமை சமமானதா?  அரசாங்கங்களுக்கு வாக்குகளை அளித்த எமது ஊரிலுள்ளவர்கள் குறைந்த காலம் வசித்தும்  வாக்குகளைப் பெற்றவர்கள் நீண்டகாலம் உயிர்வாழ்கின்றதுமான  சுகாதார முறைமையே இருக்கின்றது. இந்த நிலைமையை முற்றாகவே மாற்றியமைத்து நாட்டு ஆட்சியாளர்களின் வாழ்க்கையையும் பிரஜைகளின் வாழ்க்கையையும் சமமானதாக கவனிக்கின்ற அரசாங்கமொன்றை தேசிய மக்கள் சக்தி நிறுவும்.  

நீண்ட ஆயுள் பற்றி நாங்கள் கூறினாலும் நாட்டு மக்கள் மருந்துகள் இன்றி, சரியாக ஆப்பரேஷன் செய்துகொள்ள முடியாமல், தரமற்ற மருந்துகள் காரணமாக மடிகின்ற நிலைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களாக எமது ஊர்களில் வசிக்கிறார்கள்.  பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி, அவர்களுக்கான வருமான வழிவகை. போதிய அளவிலான வீடு, ஆரோக்கியமான வாழ்க்கையைக் கழிப்பதை உறுதிசெய்கின்ற கொள்கைகளையும் இலக்குகளையும் கொண்ட வேலைத்திட்டமொன்றை நாங்கள் அமுலாக்குவோம். 

இந்த கிராமங்களில் வசிக்கின்ற கமக்காரர்கள் தற்போது சிறுபோகத்தில் பயிர்செய்து பெரும்போகத்தில் கடன் செலுத்தியே வசித்து வருகிறார்கள்.  பிள்ளையின் திருமண வைபவத்தை கொண்டாடுவதாயின், ஒரு துண்டு காணியை விற்பனை செய்யவோ அல்லது டிராக்டெர், பைசிக்கிள், முச்சக்கரவண்டியை அடகுவைக்க நேரிடுகின்றது.  இதனால் விவசாயத்தை முன்னேற்றுவதை எமது பொருளாதார வேலைத்திட்டத்தின் அத்திவாரமாக அமைத்துக்கொள்வோம். 

அது ஒரு வருமான வழிவகையாக மாத்திரமன்றி  நாட்டுக்கு உணவு உற்பத்தியை செய்வதற்கான அத்திவாரமாகவும் அமையும். ஆனால் தற்போது பொன்னாங்கண்ணி, கங்குங் கீரைகூட வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்படுகின்றது. இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படுகின்ற முட்டையை சாப்பிடவேண்டிய நிலையேற்படுமென இந்நாட்டு மக்கள் எப்போதாவது நினைத்திருந்தார்களா? எம்மிடமிருந்த விதையின வளங்களை முற்றாகவே நாசமாக்கி  இறக்குமதிசெய்த விதையினங்களில் விவசாயத்தை தங்கிநிற்க வைத்துள்ளார்கள். 

எமக்கு இருந்த விதையின உற்பத்திகளை நாசமாக்கிய பின்னர் சந்தையிலிருந்து வாங்குகின்ற விதை நாற்றுகளிலிருந்து மீண்டும் விதைகளைப் பெற இயலாது. அந்த விதைகள் முளைக்க மாட்டாது.  முன்பு நவதெலிஹேனவில் இயற்கையாக வளர்ந்த தும்பைக்கு தற்போது என்ன நேர்ந்துள்ளது? பல பாகற்காய் வகைகள், மிளகாய் வகைகள், பறங்கிக்காய் வகைகள். வெள்ளரிக்காய் வகைகள் என எம்மிடம் இருந்த விதையினங்களும் எமது சூழலில் இருந்த உயிர்ப்பன்வகைமையும் முழுமையாகவே அழிக்கப்பட்டன. பழைய விதையினங்களை மீண்டும்   கண்டுபிடித்து விருத்திசெய்து மீளவும் மேம்படுத்துவதற்காக பலவற்றை சாதிக்கவேண்டியுள்ளது. 

சிறுபோகத்திலும் பெரும்போகத்திலும் மழையை நம்பி   பயிரிடுகின்ற விவசாயத்தை மாற்றியமைத்து நீர்ப்பாசனத்தினால் பேணிவரப்படுகின்ற விவசாயமொன்றை திட்டமிட்டு அமுலாக்கவேண்டும். அதைப்போலவே விவசாயத்துடன் எமது கால்நடைவளம் பின்னிப்பிணைந்திருந்தது.   விவசாயத்தையும் கிராமிய பாலுற்பத்தியையும் மீண்டும் சமாந்தரமாக முன்னெடுத்துச் செல்கின்ற வேலைத்திட்டமொன்று எமக்கு இருக்கின்றது.   அதைப்போலவே கிராமிய மக்களுக்கு தொழில் வாய்ப்புகளைத் தருகின்ற முதலீடுகளை இந்த பிரதேசங்களுக்கும் அழைப்பிக்க வேண்டும். அதற்காக தொழில்கள் மற்றும் போதியளவிலான வருமானத்தை பெற்றுக்கொடுத்து 

சிறந்த மன நிம்மதியை உறுதிப்படுத்துவது எமது ஆட்சியின் அடிப்படை நோக்கமொன்றாக அமைகின்றது. தற்போது எந்தளவு தலையிடிகளால் மண்டைகள் நிரம்பி இருக்கின்றன.? இவ்விதமான பிரச்சினைகளால் நிரம்பியுள்ளவர்கள் பயணமொன்றை மேற்கொள்ளும்வேளையில் தாம் இறங்கிய பஸ் வண்டியிலேயே மோதி இறக்கின்ற பல தருணங்கள் பதிவாகி இருக்கின்றன. எனினும் நாங்கள் களிப்படைவதற்காக மகிழ்ச்சியடைவதற்காக மாத்திரமன்றி மதரீதியான யாத்திரைகளை மேற்கொள்ள வாய்ப்பு நிலவுகின்ற வாழ்க்கையைக் கட்டியெழுப்புவோம். எங்களுக்கு தற்போது வாழ்க்கைக்கான உரிமை கிடைத்திராவிட்டால்  எமது பிள்ளைகளுக்கேனும் அத்தகைய வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க வேண்டும்.  

அதற்காக நாங்கள் முதலில் எங்கள் அரசாங்கமொன்றை அதிகாரத்திற்கு கொண்டுவரவேண்டும். பொதுமக்களுக்கு நன்மை, நிம்மதி,  முன்னேற்றத்தை பெற்றுத்தருகின்ற தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கமொன்றை நிறுவுவோம்.  ஊர்களுக்கு வந்து அரிசி பங்கிட்டு. மீண்டும் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவே ஆட்சியாளர்கள் முனைகிறார்கள். ஒரு மாதத்திற்கு அரிசி பங்கிட வரவுசெலவில் 550 கோடி செலவிட்டாலும்  650 கோடியை அதற்காக செலவிடுகிறார்கள். மறுபுறத்தில் சீனி வரி மோசடி 1500 கோடி என்பது மாதமொன்றுக்கு அரிசி பங்கிட அறுநூற்றி ஐம்பது கோடி செலவாகின்றதென எடுத்துக்கொண்டால் சீனி வரி மோசடி மூலமாக சூறையாடிய பணத்திலிருந்து ஒரு குடும்பத்திற்கு இருபத்தைந்து கிலோ அரிசி வீதம் கொடுக்க முடியும்.  பிணைமுறி மோசடியும் அதுபோன்றதே. பொருட்களை பங்கிடுதல் தொடர்பில் நீங்கள் ஏமாற வேண்டாமென நாங்கள் மக்களிடம் கேட்டுக் கொள்கிறோம். காணிகளுக்கு உறுதிகளை வழங்குகிறார்களாம். "அஸ்வெசும" பணத்தொகையை அதிகரிக்கப் போகிறார்களாம். 

இவ்விதமாக "அஸ்வெசும" எதிர்வரும் திசெம்பர் 31 வரை மாத்திரமே செலுத்தப்படும். அத்திகதியாகும்போது பொதுத் தேர்தலும் முடிந்திருக்கும்:  அஸ்வெசுமவும் முடிந்திருக்கும்: ரணில் விக்கிரமசிங்கவும் இல்லை. ரணில் 1977 இல் இருந்து பாராளுமன்றத்தில் இருக்கிறார். மக்களின் பிரச்சினைகளுக்கு உண்மையாகவே தீர்வுகளை வழங்கியிருந்தால் இந்த நாட்டுக்கு இந்த கதி நேர்ந்திருக்கமாட்டாது.  அதனால் இந்த ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.  
நாங்கள் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்பதற்கான உத்தரவாதத்தை அளிக்கிறோம். நாட்டைக் கட்டியெழுப்பும்வரை அவசியமான மக்களுக்கு மானியம் வழங்குவோம். எமது அரசாங்கத்தின் முதலாவது பொறுப்பு உணவு, சுகாதாரம், கல்வியாக அமையும். ஒவ்வொரு பிரஜைக்கும் உணவு கிடைக்கின்ற, அவசியமான சுகாதார வசதிகள் வழங்கப்படுகின்ற அத்துடன் பிள்ளைகளுக்கு கல்வியை வழங்குகின்ற வேலைத்திட்டத்தை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.  இது ஒரு வறிய பி்ச்சையேந்துகின்ற நாடாக விளங்கவேண்டியதில்லை. மக்கள் அவ்விதமாக துன்பப்படுகின்ற நாடாக அமையவேண்டியதில்லை. அது இயற்கை வளங்கள் அனைத்தும் நிறைந்த ரத்னதுவீபம் ஆகும். 

இத்தகைய ரத்னதுவீபத்தில் மக்கள் உணவின்றி மடிகிறார்கள்.  மருந்து இல்லாமல் மடிகிறார்கள். சரியான வீடு இன்றி மக்கள் அல்லற்படுகிறார்கள்.  நாங்களும் நீங்கள் அனைவரும்  ஒன்றுசேர்ந்து அனைவரும் வாழக்கூடிய ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவோம். இதுவரை நாட்டை ஆட்சிசெய்தவர்கள் மக்களை பிளவுபடுத்தி பாரிய யுத்தமொன்றை உருவாக்கினார்கள். வடக்கிலும் தெற்கிலும் அரசியல்வாதிகள் தமது அதிகாரத்திற்காக யுத்தத்தை உருவாக்கினார்கள். 

பிரபாகரனால் தற்கொலை குண்டுதாரிகளை உருவாக்கக் கூடிய வகையில் 1981 அபிவிருத்தி சபை தேர்தலை சீர்குலைத்திட நடவடிக்கை எடுத்தார்கள். ரணில் விக்கிரமசிங்கவை உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினர் காடையர் கும்பலை யாழ்ப்பாணத்துக்கு  அழைத்துச்சென்று நூலகத்தை தீக்கிரையாக்கினார்கள். வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக நூலகதிற்கு தீ மூட்டுதல் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? யாழ் மக்கள் அந்த நூலகத்துடன் இணைந்து பல நூல்களை வாசித்தறிந்தார்கள். 

நானறிந்த நூலகங்கள் மத்தியில் பாதணிகளை கழற்றிவைத்துவிட்டு உட்பிரவேசிக்கின்ற நூலகம் யாழ்ப்பாண நூலகம் மாத்திரமே. மத வழிபாட்டுத் தலமொன்றுக்குச் செல்வதுபோல்தான் உட்பிரவேசிப்பார்கள். வடபகுதி மக்களுக்கும் யாழ் நூலகத்திற்கும் இடையில்  அத்தகைய உறவே நிலவியது. எனினும் 1981 இல் ரணில் விக்கிரமசிங்கவை உள்ளிட்ட குழுவினருக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அந்த நூலகத்திற்கு தீமூட்டினார்கள்.  தாம் அந்தளவுக்கு மதிப்பளித்த   நூலகத்திற்கு தேர்தலுக்காக தீவைத்ததும்  தமிழ் மக்களின் இதயங்கள் வெடித்தன. 
   
தெற்கின் அரசாங்கங்கள் தமது நூலகத்தை தீக்கிரையாக்கிய  வேதனையில் இருந்து விடுபட முன்னராகவே  1983  "கறுப்பு ஜுலையை" உருவாக்கினார்கள். எமது கட்சியைத் தடைசெய்யவேண்டிய தேவை ஜே.ஆருக்கு ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் மக்கள் விடுதலை முன்னணிமீது நம்பிக்கைவைத்து அதனைச் சுற்றி குழுமத் தொடங்கினார்கள். ஜே. ஆர். ஜயவர்தன அதனைக்கண்டு அச்சமடைந்தார். 

அன்றைய மக்கள் விடுதலை முன்னணியின் வளர்ச்சி ஜே. ஆர். ஜயவர்தனவின் அதிகாரத்திற்கு அச்சுறுத்தலெனக் கருதி 1983 கறுப்பு ஜுலையைக் காரணங்காட்டி எமது கட்சியை தடைசெய்தார். ஜே. ஆர். ஜயவர்தன, ரணில் விக்கிரமசிங்க கொழும்பு நான்காம் குறுக்குத் தெருவினை தீக்கிரையாக்கி கறுப்பு ஜுலையை நிர்மாணித்தார். ஜே. ஆர். ஜயவர்தனவின் காடையர்கள் முழுநாட்டையும் தீப்பிழம்பாக மாற்றினார்கள்.  தமிழ் மக்களின் உடைமைகள், உயிர்களை கறுப்பு ஜுலை மூலமாக நாசமாக்கினார்கள்.

தற்போது தமிழ் "டயஸ்போறா" என இருக்கின்ற பலர் 1983 இல் நாட்டை விட்டுச் சென்றவர்களாவர். தெற்கில் தமிழ் மக்களின் சொத்துக்களைப்போன்றே தமிழ் மக்களின் உயிர்களை அழித்தமை மற்றும் விரட்டியத்தமை காரணமாக தனிநாடு ஒன்றை கட்டியெழுப்புகின்ற பிரபாகரனின் எண்ணக்கருவிற்கு பாரிய உந்துசக்தி கிடைத்தது.  அதனூடாக பாரிய ஆயுதமேந்திய இயக்கமொன்று உருவாகியது. 

வடக்கிலும் தெற்கிலும் உயிர்களால் நட்டஈடு செலுத்தியவர்கள் சாதாரண தாய் தந்தையரின் பிள்ளைகளாவர். வடக்கின் தாய்மார்களின் பிள்ளைகள் எல்ரீரீஈ இல் இணைந்தார்கள். மேலே இருக்கின்ற ஆட்சியாளர்கள்  யுத்தத்தை உருவாக்கி எமது ஊர்களை பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளினார்கள். சிங்களப் பிள்ளைகளை யுத்தத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.  

மீண்டும் மோதல்கள் ஏற்படாத சிங்கள, தமிழ்,  முஸ்லீம் மக்களுக்கிடையில்  ஒற்றுமையைக் கட்டியெழுப்புகின்ற தேசத்தை உருவாக்குவதே எமது தலையாய நோக்கம். எமது தலைமுறையினர் யுத்தம் புரிந்தாலும் எமது பிள்ளைகள் யுத்தத்தில் ஈடுபட இடமளிக்க முடியாது. சிங்கள அம்மா, அப்பாவைப்போன்றே தமிழ் அம்மா, அப்பாவிற்றகும் தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி இல்லாமல் போனமை, விவாகம் இல்லாமல் போனமை, மருந்துகள் இல்லாமல் போனமை போன்றே மனநிம்மதி இல்லாமல் போனமை தொடர்பில் பிரச்சினை நிலவுகின்றது. 

அதனால் எமது தேவை பிளவுபடுவதை விடுத்து ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவதாகும். மீண்டும் பிளவுபடாத ஒரு நாட்டைக் கட்டியெழுப்புகின்ற பொறுப்பு தேசிய மக்கள் சக்திக்கு உண்டு. அதனால் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து அரசாங்கமொன்றை அமைத்திடுவோம். அதற்காக அனைவருக்கும் அழைப்பு விடுகிறோம்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி