பாறுக் ஷிஹான்
-----------------------

நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம்

மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான கணக்காளரை மீண்டும் எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆந் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கானது திங்கட்கிழமை (27) மன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் சந்தேக நபருக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் மீண்டும் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

சந்தேக நபரான கணக்காளர் நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் மருதமுனை பகுதியில் வைத்து பெரிய நீலாவணை பொலிஸாரினால் ஏப்ரல் மாதம் திங்கட்கிழமை (22) இரவு கைது செய்யப்பட்டிருந்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி