ஹெலிகொப்டர் கொள்வனவு செய்வதாகக்

கூறி 70 மில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவுரா லங்கா நிறுவனத்தின் தலைவர் விரஞ்சித் தம்புகலவை  பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதிவான் பவித்ரா சஞ்சீவனி பத்திராஜா இன்று (27) உத்தரவிட்டுள்ளார்.

IWS ஹோல்டிங் நிறுவனம் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேகநபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கடந்த 22ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
 
சந்தேக நபருக்கு தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு பிணைகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி