கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள

பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றுக்குள் துப்பாக்கி ஏந்தியபடி நேற்று (26) மாலை புகுந்த இனந்தெரியாத நபர் ஒருவர் சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான தொலைபேசிகள் அடங்கிய பையைக்  கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வர்த்தக நிலையத்துக்குள் நுழைந்த வந்த நபர் கைத்துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி கொள்ளையிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....