காசா பகுதியின் ரஃபாவிலுள்ள அகதிகள்

முகாம் மீது  இஸரேல் நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது. 

தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள ஹமாஸ் இலக்கை நோக்கி வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

ஆனால் தெற்கு காசா நகரமான ரஃபாவில் இடம்பெயர்ந்த மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஹமாஸ் கூறுகிறது.

இருப்பினும், ரஃபாவில் உள்ள ஹமாஸ் தளத்தையே தமது   விமானப்படை தாக்கியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி