அரசாங்கத்துக்குச்  சொந்தமான காணியை சட்டவிரோதமான

முறையில் சிலர் ஆக்கிரமித்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில்  கண்டறிய நேற்று 26ஆம் திகதி குறித்த இடத்துக்குச்  சென்ற புத்தளம் பிரதேச செயலாளர்  சம்பத் வீரசேகரவை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அச்சுறுத்தியதாக அவர் மேலதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளார். 

மேலும், பிரதேச செயலாளரை அச்சுறுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்தியதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இதேவேளை, புத்தளம் பிரதேசவாசிகள் குழுவொன்று குறித்த காணி தமக்கே சொந்தமானது என்பதற்கான பத்திரங்களை முன்வைத்து, உப்பு கைத்தொழில் முடிந்து அறுவடை செய்த உப்பை களஞ்சியப்படுத்துவதற்கு  குறித்த காணியை வழங்குமாறு கோரி புத்தளம் மாவட்ட செயலகத்துக்கு  முன்பாக  கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  அலிசப்ரி ரஹீமிடம் கேட்டபோது,  

பிரதேச செயலாளர் தனது கடமைகளை ஞாயிற்றுக்கிழமை  எவ்வாறு செய்ய முடியும்?  பிரதேச  செயலாளர் அங்கு வந்திருப்பதைக் கேள்விப்பட்டு  குறித்த இடத்துக்கு  சென்றேன். ஆனால்  நான் அவரை மிரட்டவில்லை இந்தக் காணி புத்தளத்தில் உள்ள எங்கள் மக்களுக்கு சொந்தமானது. அதை யாருக்கும் கொடுக்க முடியாது என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி