நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக

கொழும்பு பிரதேசத்தில் வீழ்ந்த மரங்கள் பல ஆபத்தான நிலையில் இல்லை என தகவல் வெளியாகியுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு மாநகர சபை நடத்திய விசாரணையில் 50 முதல் 150 வருடங்கள் பழமையான சுமார் 200 மரங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
 
அவற்றில் பல மரங்கள் அரிப்பு காரணமாக விழும் அபாயத்தில் உள்ளதாக கொழும்பு மாநகர சபை மேலும் தெரிவித்துள்ளது.
 
அடையாளம் காணப்பட்ட மரங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டு மற்ற மரங்கள் சீரமைக்கப்பட்டன.
 
எவ்வாறாயினும், தென்மேற்கு பருவக்காற்றுடன் தற்போது நிலவும் காற்று காரணமாக கொழும்பு மாநகரப் பகுதிக்குள் 50 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

எவ்வாறாயினும், வீழ்ந்துள்ள மரங்கள் எதுவும் முன்னர் இனங்காணப்பட்ட அபாயகரமான நிலையில் இல்லை என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், காற்றின் காரணமாக பல மரங்கள் விழுந்துள்ளது தெரிய வந்துள்ளது என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....