தற்போதைய சட்டமா அதிபர்
சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலத்தை இந்த வருடம் டிசம்பர் இறுதி வரை நீடிக்குமாறு ஜனாதிபதி ரணில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பு சபைக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக அறிய முடிகிறது.
சட்ட மா அதிபரின் பதவிக்காலம் ஜூன் 27 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
ஜுன் மாதம் அரசியலமைப்பு பேரவை கூடும் திகதி தொடர்பில் அரசியலமைப்பு சபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படவில்லை எனவும், சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்பு தொடர்பான யோசனை சபாநாயகருக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.