ஈரான் ஜனாதிபதி  ரைசி பயணம் செய்த ஹெலிகாப்டர்

விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணை நடத்தப்பட்டு அது தொடர்பான விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  

ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விசாரணையை ஈரான் ஆயுதப்படையினர் மேற்கொண்டனர். அஜர்பைஜானில் இருந்து ஈரானுக்கு சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் பலர் உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டர் அஜர்பைஜானில் இருந்து ஈரானுக்கு பறந்து கொண்டிருந்தது, மேலும் இரண்டு ஹெலிகாப்டர்கள் துணையுடன் சென்ற மற்றைய இரண்டு ஹெலிகாப்டர்களுக்கும் எந்த விபத்தும் ஏற்படவில்லை, ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.   

விசாரணை அறிக்கையின் மூலம், ஜனாதிபதி ரைசி மற்றும் அவரது குழுவினர் பயணித்த 'பெல்' ரக ஹெலிகாப்டர் தீப்பிடித்து மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக ஈரான் ஆயுதப் படைகள் சுட்டிக்காட்டியுள்ளது.

அப்போது, ​​கடும் பனிமூட்டம் நிலவியது. ஹெலிகாப்டர் ஒருபோதும் பாதையை மாற்றவில்லை என்றும் ஏவுகணைகளால் சுடப்படவில்லை என்றும் ஈரானிய ஆயுதப் படைகள் உறுதிப்படுத்தியுள்ளது. (ஏஎப்பி)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி