திபுலபலஸ்ஸ ரொட்டலவெல விளையாட்டரங்கில்

நடைபெற்ற விழா ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் சாகச கிணறு சரிந்து வீழ்ந்ததில்  ஐவர் காயமடைந்து கிராந்துருகோட்டை  மற்றும் மஹியங்கனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திபுலபலஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் 50 வயதுடைய பெண் ஒருவரும் 13, 36, 40 மற்றும் 45 வயதுடைய நான்கு ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் திபுலபலஸ்ஸ ரொட்டலவெல பிரதேசத்தில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் இருவர் கிராந்துருகோட்ட  வைத்தியசாலையிலும் ஏனைய மூவர் மஹியங்கனை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நேற்று இரவு திவுலபலஸ்ஸ, ரொட்டலவெல பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வைக் காணப்பதற்காக  பெரும் எண்ணிக்கையானோர்   வருகை தந்திருந்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....