கிந்தோட்டை பிந்தலியா ரயில்

கடவையில் இன்று (23) இடம்பெற்ற ரயில் விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மருதானையில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த ருஹுணு குமாரி கடுகதி ரயிலிலால் மோதப்பட்டு  மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று இளைஞர்களும் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 
தெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெக்கில மண்டியாவைச் சேர்ந்த இருபது வயதுடைய மூன்று இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
 
இவர்கள் இன்று மாலை மோட்டார் சைக்கிளில் டயரை மாற்றுவதற்காக சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
 
விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இருவரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....