40 இலட்சம் ரூபா பெறுமதியான தொலைபேசி
கம்பிகளைத் திருடி வென்னப்புவ பகுதியில் உள்ள பழைய இரும்புக் கடைகளுக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் அந்தத் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றிய 7 தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
வென்னப்புவ துனுவில சந்தி மற்றும் கிரிமதியான சந்திக்கு இடையில் சுமார் 4 கிலோமீற்றர் தூரத்துக்கு பதிக்கப்பட்டிருந்த நிலத்துக்கடியிலான இவ்வாறு அறுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுனேரிய, மாரவில, தொடுவாவ, கொஸ்வத்தை, ஆனமடுவ, கொபேகனே ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 38, 43, 37, 35, 51, 45, மற்றும் 56 வயதுடைய 7 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வென்னப்புவ பிரதேசத்தில் டெலிகொம் நிறுவனத்தினால் போடப்பட்டிருந்த நிலத்தடி தொலைபேசி இணைப்புக் கம்பிகளை சிலர் வெட்டிக் கொண்டிருந்ததனை அவதானித்த பொதுமக்களே இது தொடர்பில் தகவல் வழங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்