அரசாங்கம் முன்னெடுத்துவரும் நிவாரணம் வழங்கும் நிகழ்சித் திட்டத்தில் காணாமல் போனோரின் குடும்பங்களையும் உள்ளடக்குமாறு காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஜனாதிபதி செயலணியின் தலைவரிடம் கடித மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தற்போதைய நிலைமை காரணமாக காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களும் தமது வருமானத்தை இழந்துள்ளனர். அதேபோன்று அவர்களிடம் எந்த சொத்துமே இல்லாத நிலையில் இந்த நிலைமை மோசமடைந்துள்ளதாக காணாமல் போனோரின் அலவலகம் சார்பில் அதன் தலைவர் சாலிய பீரிஸ் கடிதத்தின் வாயிலாக அறிவித்துள்ளார்.

இந்தக் குடும்பங்களுக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள பொருட்கள், நிதி உதவிகள் ஆகிய எதைக் கொண்டாவது உதவி வழங்குமாறும், இந்த நிவாரணங்களை குறித்த பிரதேசத்தின் கிராம சேவை அதிகாரியூடாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் சாலிய பீரிஸ் கேட்டுள்ளார்.

அதேபோன்று, காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் இதற்கு முன்னர் பரிந்துரைத்த ஒரு நிவாரண நடவடிக்கை என்ற வகையில், அரசாங்கம் 2019 வரவு செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் ஒதுக்கி, இராணுவத்தில் மற்றும் பொலிஸில் கடமையில் இருக்கும்போது காணாமல் போன மற்றும் வேறு விதத்தில் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் ரூ.6000 வழங்கத் திட்டமிட்டிருந்ததாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்கள் பற்றி அலுவலகம் குறிப்பிடுவதைப் போன்று. 2019 நவம்வர் 11 வரை ரூ. 11 மில்லியன் பெறுமதியான நிவாரணம் 153 பேருக்கு மொத்தமாக வழங்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களினது குடும்பங்களில் கடுமையான பிரச்சினைகளுக் முகம் கொடுத்துள்ள மூத்த உறுப்பினர்கள் உள்ள குடும்பங்கள் மற்று பெண்கள் குடும்பத் தலைவியாக உள்ள குடும்பங்ள் இருப்பதாக காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் சுட்டிக் காட்டுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி