தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட ஒருவர் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 17 ஆவது வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர் 31 வயதுடையவராவார்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குமார விக்கிரமசிங்க தெரிவிக்கையில், குறித்த நபரின் மரணம் தொடர்பில் ஏற்கனவே விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி மருந்தை செலுத்தியதால் மரணம் நிகழ்ந்ததா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பதை கண்டறிய முடியும் என வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.