பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளுக்கான  காவலாளிகள்

2013 ஆம் ஆண்டு வரையில் 2064 பேர் பொலிஸ் திணைக்களத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு 8 மணி நேர சேவைக்கு நாள் ஒன்றுக்கு 250 ரூபா ஊதியம் வழங்கப்படுகிறது. 

30 நாட்களுக்கு மாதாந்தம் சுமார் 7500 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். ஆனால் ஒரு சில மாதங்களுக்கான  இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

10 ஆண்டுகளாக பணிபுரியும் இவர்களை சேவையில் நிரந்தரமாக்க எந்த ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை. ஒரு இலட்சம் வேலை திட்டத்தின் கீழ் ரயில்வே திணைக்களத்தின் நிரந்தர சேவையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பணியாளர்கள், பாதுகாப்பற்ற புகையிரத கடவை காவலாளி பணிக்கு பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

எனவே, குறைந்த சம்பளத்தோடு இச்சேவையை பல வருடங்களாக மேற்கொண்டு வரும் இந்த தரப்பினர் மீது அரசாங்கம் கவனம் செலுத்தி, இழப்பீடு வழங்கி சேவையிலிருந்து விலகுவதற்கு அல்லது சேவையில் நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு கோரிக்கை விடுத்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி