வடக்கில் யுத்தத்தில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல்போன

ஆயிரக்கணக்கான  உறவுகளின் நினைவாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வின்போது ஏறாவூர் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை மற்றும் இடையூறுகளுக்கு பிரதேசத்தின் சிவில் ஆர்வலர்கள் மற்றும் மதத்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மே 18ஆம் திகதி இடமபெற்ற கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் நீதிமன்ற உத்தரவை சமர்ப்பிக்காமல் ஏறாவூ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என் ஹர்ஷ டி சில்வா நடந்து கொண்ட முறைகளை தமிழ் ஊடகவியலாளர்கள் காணொளியாக பதிவு செய்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்களின் நினைவுத்தூபி பொலிஸாரால் தாக்கப்பட்டதைக் கண்டித்து 20ஆம் திகதி கிழக்கு ஊடகவியலாளர் சங்கத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சிவில் சமூக ஆர்வலர் விமலசேன லவகுமார், பொலிஸார் அத்துமீறிச் செயற்படுவதாகக் குற்றம் சுமத்தினார் .

“பொதுவாக ஒரு கஞ்சியைக் கூட பகிர்ந்து கொள்ள அனுமதிக்க முடியாத வகையில் அரசு செயல்படுகிறது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில். சட்டம் ஒழுங்கை மீறி பொலிஸார் செயற்படுகின்றனர். சட்டத்தை அவமதிக்கும் இந்த செயலை பொலிஸார் செய்து வருகின்றனர். சட்டத்தை தங்களுக்கு ஏற்றவாறும் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டும் இப்படி நடந்து கொள்கிறார்கள்”.

உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு இடமளிக்காமல் பொலிஸார் முட்டுக்கட்டை போடுவது பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையூறாக அமையாது. மாறாக தமிழ் மக்களின் உரிமைகளுக்கே இடையூறாக அமையும் என சமூக ஆர்வலர் விமலசேன லவகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

"இது மாணவர்களுக்கு ஒரு பிரச்சினையாக இல்லை. இதுதான் தமிழ் மக்களுக்கு நடந்தது. இதை ஒரு சிவில் சமூகமாக நாங்கள் கண்டிக்கிறோம். இனிவரும் காலங்களில் இவ்வாறானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்.

சர்வதேச சமூகமும் இதில் கவனம் செலுத்த வேண்டும். அரசும், பொலிஸாரும் தங்களுக்கு ஏற்றவாறு சட்டத்தை மாற்றுவதை தடுக்க மனித உரிமைகள் ஆணையம் செயறபட வேண்டும்.

இறந்தவர்களுக்கு மரியாதை கொடுப்பது இந்து கலாசாரத்தின் ஓர் அங்கமாக இருப்பது போல், இறந்தவர்களுக்கு மரியாதை செய்வதும் ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை உரிமையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவை வன்முறை மூலம் சீர்குலைத்த ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என் ஹர்ஷ டி சில்வாவிடம் ஊடகவியலாளர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் பலமுறை கேட்டபோதும், நினைவு தின நிகழ்வை நிறுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவை அவர் முன்வைக்கவில்லை.

பல்கலைக்கழக மாணவர்களினால் பூக்களும் விளக்குகளும் வைத்து அஞ்சலி செலுத்தும் மேசை, கஞ்சி சமைப்பதற்கு பயன்படுத்திய பானைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன என்றார்.

Eravur 1

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி