தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நீர்மின்
உற்பத்தி தொடர்பான சரியான தகவல்களை உரிய நேரத்தில் தொகுக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் மின் கட்டண திருத்த யோசனையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிப்பதில் மேலும் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் இலங்கை மின்சார சபை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இது தொடர்பான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு மின்சாரக் கட்டண திருத்த யோசனை உடனடியாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என மின்சார சபை உறுதியளித்துள்ளது.
இதேவேளை, எதிர்பாராத சூழ்நிலை காரணமாக முன்மொழிவை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இரண்டு முறை இவ்வாறு நீட்டிக்கப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூறுகிறது