மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக
உயிரிழந்துள்ளார். மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இநத்க கைதி நேற்று (20) இரவு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 24 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
குறித்த கைதி மூளைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகவும், இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தவிர மாத்தறை சிறைச்சாலையில் உள்ள மற்றுமொரு கைதியும் காய்ச்சல் காரணமாக மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதத்திலும் மாத்தறை சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகி பல உயிரிழப்புகளும் ஏற்பட்டன.