ஐ.எஸ் தீவிரவாதிகளாகக் கருதப்படும்

நான்கு இலங்கையர்களை குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் நால்வரும் இலங்கையிலிருந்து சென்னை வழியாக அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
 
இந்த நான்கு இலங்கையர்களுக்கும் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. 
 
கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், எந்த இடத்துக்கு சென்றுள்ளனர் என்பது தெரியவரவில்லை.
 
ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் மூன்று அணிகள் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்துக்கு வரவிருந்ததாகவும், அதன் காரணமாக விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 
 
பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி,  இந்த சந்தேக நபர்கள் ஆயுதம் ஏந்திய தாக்குதலுக்கு தயாராக இருந்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டிருந்த போதிலும், எதற்காக என்பது உறுதிப்படுத்தப்படவில்லை

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி