ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்துடன் நெருக்கடியில்
சிக்கியிருந்த தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மீண்டும் கட்சியின் செயற்பாடுகளில் தீவிரமாக பங்களிப்பதற்காக இரு தரப்பினரும் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க சரத் பொன்சேகாவுடன் கலந்துரையாடுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இதன்படி, கட்சியின் பதவிகளில் இருந்து தம்மை நீக்கியமைக்கு எதிராக தான் தாக்கல் செய்த வழக்கை தீர்த்து வைப்பதில் சரத் பொன்சேகா கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.