ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரைக் கொலை செய்து பணம்

மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையடித்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக நால்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாலதெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று  (19) அதிகாலை 4  மணியளவில் இந்தப் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்  கூறுகின்றனர்.

சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை  சோதனையிட்ட பொலிஸார், அவரிடமிருந்து சுமார் 3 இலட்சம் ரூபா பணம் மற்றும் தங்க நகைகளைக் கைப்பற்றியுள்ளனர்.

இதனடிப்படையில் சந்தேக நபரை கைது செய்து பொலிஸுக்கு அழைத்துச் சென்றதாகவும்,அவரிடம் இருந்த கடிதங்களை பரிசோதித்த போது, ​​கொலைச் சம்பவம் தொடர்பில் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபரின் மனைவியினது மாமா உடபட மூவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி