எஸ்.அஷ்ரப்கான்
---------------------------

கல்முனையை துண்டு துண்டாக உடைப்பதற்கு நான் தயார்.

இன ஐக்கியத்துக்காக, சமாதானத்துக்காக கல்முனை மக்களின் அபிவிருத்திக்காக நான் துண்டாடுவதற்கு தயாராக உள்ளேன். இதற்கு தமிழ் தலைவர்கள் தயாரா? என பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கேள்வி எழுப்பினார்.

கல்முனை மாநகர கேட்போர் கூடத்தில் இன்று (18) இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், நான் இந்த நகரத்தின் மக்கள் தலைவன் சொல்லுகிறேன், கல்முனையை நாங்கள் பிரிப்போம். இதற்கு தைரியம் உள்ள தமிழ் தலைவர்கள் முன்வரட்டும்.

கொழும்பில் வெள்ளவத்தை மற்றும் தமிழ் பிரதேசங்களை வைத்து தமிழர்களுக்கு பிரித்து வழங்குமாறு ஆக குறைந்தது ஒரு முகநூல் பதிவை ஏனும் இவர்களால் இடமுடியுமா?

கல்முனையில் உள்ள விசேட அம்சம் என்னவென்றால் நான்கு சமூகங்கள் வாழ்வதே. இவர்கள் ஒற்றுமையாக வாழவேண்டும். எனவேதான் தமிழ் இளைஞர்கள், புத்திஜீவிகள் நாங்கள் இணைந்து இந்த மக்களுக்காக ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி