நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு
விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் கொலை மிரட்டல் தொடர்பான விசாரணைகளை கோட்டை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
கொலை மிரட்டல் தொடர்பான தொலைபேசி அழைப்பு நேற்று (15) இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்துக்குக் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் தேர்தலில் போட்டியிட இராஜாங்க அமைச்சருக்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் தனது அச்சுறுத்தலைப் புறக்கணித்தால் அவரைக் கொன்றுவிடுவேன் எனவும் ஷெஹான் சேமசிங்கவை தொலைபேசியில் அச்சுறுத்திய நபர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இராஜாங்க அமைச்சரின் முறைப்பாட்டின் அடிப்படையில் கோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.