ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷவை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால நியமித்தமையை செல்லுபடியற்ற உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட வழக்கை விசாரிக்க தீர்மானித்த கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி சந்துன் விதானகே இந்த வழக்கின் உண்மைகளை இன்று (15) உறுதி செய்யுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மனுதாரர்களிடம் கேட்டுக்கொண்டார்
விஜயதாச ராஜபக்க்ஷவின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என கடுவெல மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும் அந்த உத்தரவுகளுக்கு பாரபட்சமின்றி வழக்கின் உண்மைகளை உறுதிப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டிய பிரதம மாவட்ட நீதிபதி தெரிவித்தார்.