கொலை, கப்பம், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல
குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலக தலைவன் மன்னா ரமேஷ் துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டபோது, அந்நாட்டுப் பொலிஸாருக்கும் முகவருக்கும் இரண்டு கோடி ரூபாவை இலஞ்சமாக வழங்கி தப்பிச் செல்ல முயற்சித்தமை தெரிய வந்துள்ளது.
இந்த நாட்டுக்கு அழைத்து வரப்படும்வரை அந்த முயற்சியை கைவிடாத அவர், துபாய் பொலிஸாரின் காவலில் இருந்து தப்பிக்க பல்வேறு யுக்திகளை கையாண்டதாகவும் தெரிய வந்துள்ளது.
மன்னா ரமேஷிடம் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது. துபாயில் கைது செய்யப்பட்டுள்ள பல குற்றவாளிகள் அங்குள்ள முகவர்களுக்கு பல கோடி ரூபாவை இலஞ்சம் வழங்கி சிறையிலிருந்து வெளியேறி வருவதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.