வடக்கு - கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுத்து விட்டு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டு வர வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கூறிவைக்க விரும்புவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சும் நினைவேந்தல் நிகழ்வைப் பொலிஸார் நீதிமன்றக் கட்டளை ஊடாகத் தடுத்துள்ளனர் என்று அறிய முடிகிறது. நினைவேந்தல்கள் உலக நியமங்களிலே மிக முக்கியமானவை.

ஆகவே, இதனைத் தடுக்கின்றவர்கள் மிக மோசமான செயல்களிலே ஈடுபடுகின்றார்கள். ஜனாதிபதி ரணிலுக்கு ஒரு செய்தியைச் சொல்லுகின்றோம். அதாவது உங்களது கட்டளையின் பெயரிலே அல்லது உங்கள் அமைச்சர்களின் கட்டளையின் பெயரிலே நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்கின்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுமாக இருந்தால் வரப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் எமது மக்களிடம் வாக்குகளைக் கேட்டு வரவேண்டாம்.

இதேபோன்று இதனை மற்றைய தலைவர்களிடத்திலேயும் நாங்கள் கூற விரும்புகின்றோம். எமது மக்கள் தமக்கு நிகழ்ந்தவற்றை அனுஷ்டிப்பதை அங்கீகரிக்கவில்லை என்றால் இங்கே எமது மக்களின் வாக்குகளைக் கேட்டு வரவேண்டாம் என்பதையும் நாங்கள் சொல்லி வைக்க விரும்புகின்றோம் என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி