பெலியத்தையில் எமது மக்கள் சக்திகட்சியின் செயலாளர் 

சமன் பிரசன்ன பெரேரா உட்பட ஐவரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையவர் என நம்பப்படும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவராக கருதப்படும் 'டபுள் கெப் சுட்டி' என அழைக்கப்படும் நபர் உட்பட அவரது இரு சகாக்களும் இந்தியாவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட மூவரும் கொஸ்கொட சுஜீயின் சகாக்கள் என்றும், அவர்  துபாயிலிருந்து  ஐவரின் படுகொலைக்கு வழிவகுத்தவர் என்றும் இந்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டபுள் கெப்  சூட்டி கொஸ்கொட சுஜியின் துப்பாக்கி சுடும் பிரிவைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

இந்த மூவரின் புகைப்படங்களைப் வெளியிட்ட  இந்திய நாளிதழ் ஒன்று இவர்கள் கைது செய்யப்பட்டதாக  செய்தி வெளியிட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி