குளியாபிட்டிய பிரதேசத்தில் இளைஞர்

ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கு உதவியமை மற்றும் குற்றத்தை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 18 வயதுடைய வஸ்ஸாஉல்ல, இலுக்கின்ன பிரதேசத்தை சேர்ந்தவராவார்,

கடந்த 22ஆம் திகதி குளியாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்  தனது காதலியை பார்ப்பதற்காக குளியாப்பிட்டிய வஸ்ஸமுல்ல பகுதிக்கு சென்றிருந்த நிலையில், காணாமல் போயிருந்தார். பின்னர் இவரது   சடலம் சிலாபத்தின்  மாதம்பே பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில்,   காதலியின் தாயும் தந்தையும் முன்னர் கைது செய்யப்பட்டமை தெரிந்ததே.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி