ரஷ்ய - உக்ரைன் போரின் கூலிப்படையில் இணைந்து கொண்ட 17 இலங்கையர்கள்

இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ரஷ்யாவுக்குச் சென்ற மேலும் இரண்டு ஓய்வுபெற்ற இராணுவத்தினர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 29 ஆம் திகதிக்கு பிறகு அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என உறவினர்கள் கூறுகின்றனர்.

பதவியாவில் வசிக்கும் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான அசங்க சந்தனவும் கடந்த பெப்ரவரி 12ஆம் திகதி ரஷ்யாவுக்காக போரிட ரஷ்யா சென்றிருந்தார்.

கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி அவர் தனது குடும்பத்தினருடன் கடைசியாக தொலைபேசியில் உரையாடியுள்ளார்.அதன்பிறகு, அவரைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை.

இதேவேளை, மதவாச்சி வஹமல்கொல்லேவ பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற கமாண்டோ அதிகாரியான பிரதீப் சந்தன, பெப்ரவரி 12 ஆம் திகதி ரஷ்யாவுக்கு புறப்பட்டுச் சென்றதுடன், மார்ச் 29 ஆம் திகதி தனது கடைசி அழைப்பையும் மேற்கொண்டுள்ளமையும் தெரிய வந்துள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி