கொவிட் தடுப்பூசியைப் பெற்ற பின்னர் 11,000க்கும் அதிகமானோர்

உயிரிழந்துள்ளதாக 2023 ஆம் ஆண்டில் ஐரோப்பிய மருந்துகள் முகவரகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் சுமார் 8,000 பேர் ஃபைசர் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டவர்களாவர். இவர்களில் 1,500 பேர் மட்டுமே அஸ்ட்ராஜெனெகாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மூன்று பில்லியனுக்கும் அதிகமான டோஸ்கள் வழங்கப்பட்ட பின்னர், ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா கொவிட் தடுப்பூசியை திரும்பப் பெற அந்த நிறுவனம் முடிவு செய்த பின்னர் இந்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

இதேவேளை மற்ற கோவிட் தடுப்பூசிகளுக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

அஸ்ட்ராஜெனெகா தனது தடுப்பூசியைப் பற்றி "நம்பமுடியாத அளவுக்கு பெருமைப்படுகிறேன்" என்று கூறியது, ஆனால் இது ஒரு வணிக முடிவின் அடிப்படையில் செயற்படுத்தப்பட்டது.

அஸ்ட்ராஜெனெகாவைப் பற்றி கருத்து தெரிவிக்கும் வல்லுநர்கள் இது ஒரு சிறந்த தடுப்பூசி என்று இன்னும் கருதுகின்றனர்.

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைப் பெற்ற பிறகு உடலில் இரத்தக் கட்டிகளால் இறந்ததாக 81 குற்றச்சாட்டுகள் மட்டுமே உள்ளன, ஆனால் அதுவும் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை.

இந்த தடுப்பூசி மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளது என்று அதை ஆதரிக்கும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மற்ற தடுப்பூசிகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி