நோர்வேயின் Myrdammen நகரில் எரிந்த காரில் எரிந்த நிலையில் இலங்கையர்

ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்த இலங்கையர் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவரது சொந்தக் காரில் தீப்பிடித்ததால் அவர் உயிரிழந்ததாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், குறித்த கார் இறந்தவருடையது என்பதை உறுதிப்படுத்த மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், கார் தீப்பற்றிய குற்றத் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், இந்த மரணம் சந்தேகத்துக்குரியது என விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி