ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்

ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷவிற்கும் இடையில் நேற்று (04)  மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெற்றது.

பெஜெட் வீதியிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் ஆரம்பமான கலந்துரையாடலில் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொடவும் கலந்துகொண்டார்.

இந்தச் சந்திப்பில் கடந்த மே தினம் குறித்தும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் நீண்ட விவாதம் நடைபெற்றது.

 பொதுத் தேர்தலை முதலில் நடத்துவது தொடர்பில் பசில் ராஜபக்சஷ மீண்டும் ஒருமுறை முன்வைத்த யோசனையை ஜனாதிபதி முற்றாக நிராகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை,  பசில் ராஜபக்க்ஷவுடனான நேற்றைய கலந்துரையாடல் மிகவும் சுமூகமாக அமைந்ததுடன், எதிர்வரும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் நல்லதொரு புரிதலை ஏற்படுத்த இந்த கலந்துரையாடல் பெரிதும் உதவியுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி