அன்னை பூபதியின் 36 ஆவது நினைவு தினம் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் பொழுது ஒரு நிமிட அக வணக்கம் செலுத்தபட்டு பொது சுடரை வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை மகளீர் அணி செயற்பாட்டாளர் பரமானந்தவள்ளி ஏற்றிவைக்க, காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.பாலசந்திரன் மலர்மாலையை திருவுருவ படத்திற்கு அணிவித்தார்.

மேலும் தொடர்சியாக நினைவேந்தலில் பங்குபற்றிய அனைவரும் ஈகைசுடரேற்றி அன்னை பூபதியின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ச்சியாக அன்னை பூபதியின் நினைவுரைகள் இடம்பெற்றது.

இதன் பொழுது முன்னாள் தவிசாளர் பாலசந்திரன், நாகரஞ்சினி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ச.ஜெயந்தன் ,நாகராஜா,விஜயன் , வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை செயலாளர் தனுஷ் ,மகளீர் அணி தலைவி ஜெயரஞ்சி ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

 

 

01 WhatsApp Tamil 350

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி