வாகன விபத்தில் காலமான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவிக்கு வடமேல் மாகாண ஆளுநர் பதவி

முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் விவாதிக்கப்படவுள்ள மாகாண ஆளுநர் திருத்தத்தில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தென் மாகாண ஆளுநர் பதவிக்கு லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது வகிக்கும் வடமேல் மாகாண ஆளுநர் பதவி காலியானால் இதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் தற்போது தென் மாகாண ஆளுநராக பதவி வகிக்கும் விலிகமகே தனது பதவியில் இருந்து ஓய்வு பெறுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் வேறு மாகாணத்தின் ஆளுனர் பதவிக்கான முன்மொழிவுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

01 WhatsApp Tamil 350

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி