ஜனாதிபதி தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் மக்கள் விடுதலை முன்னியினர், கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்

ஆண்டகையுடன் இணைவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரண்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாலித்த ரண்கே பண்டார மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டிலுள்ள மதத்தலைவர்கள் மீது மக்கள் அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடே, மக்கள் அவர்களுக்கு மரியாதை செலுத்துகின்றனர். எனவே மக்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக மதத்தலைவர்கள் செயற்படவேண்டும்.

மத்தலைவர்கள் சரியாக செயற்படுவீர்களாக இருந்தால் நாடு சிறப்பாக இருக்கும். கடந்த 2019 ஆம் எடுக்கப்பட்ட முடிவு நாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 2024 ஆண்டு ஒரு முடிவை எடுக்க வேண்டிய தேவையொன்று உள்ளது.

அந்த முடிவை எடுக்க வேண்டிய நேரம் வரும்போழுது அநாவசியமான பிரச்சினைகளை தவிர்த்து, மக்களுக்கு மீண்டும் ஒரு பிரச்சினையை உருவாக்காமல், சரியான ஒரு முடிவை எடுக்க மதத்லைவர்களான நீங்கள் இடம்கொடுக்க வேண்டும்.

அதேபோன்று இவ்வளவு காலமும் அமைதியாக இருந்த ஜேவிபியினர் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது” என அவர்  தெரிவித்துள்ளார்.

 

01 WhatsApp Tamil 350

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி