இலங்கைப் பொலிஸாரின் "யுக்திய" சோதனை நடவடிக்கைக்கு ஜப்பானிய அரசாங்கத்தின் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடெயாகி நேற்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.

பாதுகாப்பு அமைச்சு கட்டிடத்தில் அமைந்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன்போது போதைப் பொருள் ஒழிப்புத்திட்டத்தை முன்னிலைப்படுத்தி இலங்கைப் பொலிஸார் மேற்கொண்டு வரும் "யுக்திய" விசேட சோதனை நடவடிக்கை குறித்து ஜப்பானியத் தூதுவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பொலிஸாரின் பிரஜைகள் பொலிஸ் பிரிவின் செயற்பாடுகள் குறித்தும் அமைச்சர் டிரான் அலஸ் இதன் போது ஜப்பானிய தூதுவருக்கு விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

01 WhatsApp Tamil 350

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி