நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி

ஒகாமுராவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

அமெரிக்காவின் வொஷிங்டனில் நேற்று (15) ஆரம்பமான சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அரையாண்டு மாநாட்டின் போது இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.

அங்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா இதன்போது இலங்கைக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

வேலைத்திட்டத்தின் ஆரம்பம் முதல் சர்வதேச நாணய நிதியம் செய்துள்ள சாதனைகளை தொடர வேண்டியதன் அவசியத்தை அவர்கள் இலங்கைக்கு நினைவுபடுத்தியதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் சமீபத்திய சமூக-பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் IMF திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பெரிய பொருளாதார கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கான அதிகாரிகளின் அர்ப்பணிப்பு ஆகியவை அங்கு கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனைச் சந்தித்துள்ளார்.

அங்கு சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வை முடிப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி