குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களின் பின்னர் மற்றுமொரு மரணம் இன்று பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த நபர் உயிரிழந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக, உயிரிழந்த நபர் சிகிச்சை பெற்றுவந்த விடுதியில் உள்ள நோயாளிகள் மற்றும் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கருதப்படும் இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் மீண்டும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்படாமல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதாகவும், இதன் காரணமாக நாட்டில் மீண்டும் தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி