Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

காலி முகத்திடலில் 11 ஆவது நாளாகவும் தொடரும் மக்கள் போராட்டம்!

T

The Leader Desk

ஏப்ரல் 19, 2022 • 3:33 AM

காலி முகத்திடலில் 11 ஆவது நாளாகவும் தொடரும் மக்கள் போராட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாட்டை நாம் வடக்கு கிழக்கு என்று பிரிக்கப் போவதில்லை.
  • மத அடிப்படையிலும் நாம் பிரியப் போவதில்லை என்று தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் மெழுவர்த்தி ஏந்தி தமது ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இதேவேளை நேற்றையதினம் ஊடகவியலாளர்களும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் இணைந்துகொண்டதுடன் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
  • அதே போன்று சிங்களம் , தமிழ் என்றும் பிரிக்கப் போவதில்லை.
எழுத்து அளவு:

மக்களின் கோரிக்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட ஆளும் தரப்பு வீடு செல்ல வேண்டும் என்பதாக இருந்த போதிலும் நேற்றைய தினம் புதிய அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவிபிரமாணம் செய்து வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் மக்களின் கோரிக்கைகளை அரசு புறக்கணித்துள்ளதாக குற்றம் சாட்டும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை மேலும் வலுவாக முன்னெடுத்து வருகின்றனர். 

இந்த இன, மத பேதமற்ற போராட்டத்தை குழைக்கும் நோக்கி பல சதி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் மக்கள் ஒற்றுமையாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நாட்டை நாம் வடக்கு கிழக்கு என்று பிரிக்கப் போவதில்லை. அதே போன்று சிங்களம் , தமிழ் என்றும் பிரிக்கப் போவதில்லை.

 மத அடிப்படையிலும் நாம் பிரியப் போவதில்லை என்று தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் மெழுவர்த்தி ஏந்தி தமது ஒற்றுமையை வெளிப்படுத்தினர். 

இதேவேளை நேற்றையதினம் ஊடகவியலாளர்களும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் இணைந்துகொண்டதுடன் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். நாடளாவிய ரீதியிலுள்ள சைக்கிள் ஓட்ட போட்டி வீரர்களும் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

 நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து சைக்கிளில் வருகை தந்த அவர்கள் காலி முகத்திடல் போராட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, அண்மையில் இங்கிலாந்தில் இடம்பெற்ற ஒலிவர் திரைப்பட விருது வழங்கும் விழாவில் உலகின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுக் கொண்ட இலங்கையரான ஹிரான் அபேசேகர காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்தார். 

இவ்வாறானதொரு விருதைப் பெற்றமை மனதிற்கு மகிழ்ச்சியளிக்கின்ற போதிலும் , இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையில் தன்னால் அந்த மகிழ்ச்சியை உணர முடியாமலுள்ளதாகவும், அதன் காரணமாகவே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள தான் இங்கு வருகை தந்தததாகவும் அவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...