நாட்டின் வானிலை, தாங்க முடியாத அளவுக்கு வெப்பமாகிவிட்டது. அதேபோல், இந்நாட்டு அரசியலும், நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.

தேர்தல் வெறியில் உள்ள பொதுமக்களின் தேர்தல் தாகம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

எதிர்வரும் தேர்தல் குறித்த சந்தேகம் காரணமாக, அரசியல்வாதிகளின் மூளைகளும் சூடுபிடித்துள்ளன. ஒரு குழு வெற்றிக்கான படிகளில் ஏறிக்கொண்டிருக்கும் போது, மற்றொரு குழு, இரண்டும் கெட்டான் நிலைமையில் தனித்து விடப்பட்டுள்ளனர்.

மேலும் சிலர், அதள பாதாளத்துக்குள் விழுந்துள்ளனர். திடீரென ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வாக்கெடுப்பொன்றும் நடப்பட்டுள்ளது. ஆனால், கணக்கெடுப்பு நடத்தியமைக்காய பொறுப்பை ஏற்க, எவரும் இல்லை. கடந்த இரண்டு மூன்று மாதங்களாக, ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தி, பல்வேறு கணக்கெடுப்புகள் தொடர்பான ரிசல்ட்டுகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஏறக்குறைய அனைத்து கணக்கெடுப்பு அறிக்கைகளும், அனுரகுமார திஸாநாயக்கவே முன்னிலை வகிக்கிறார் என்றே கூறின. இலங்கை அரசியலை மட்டுமின்றி, சர்வதேச அரசியலையும் கலக்கிய கருத்துக் கணிப்பு, ஓரிரு மாதங்களுக்கு முன் வெளிவந்தது.

இது, "இன்ஸ்டிட்யூட் ஃபோர் ஹெல்த் பொலிசி" அல்லது IHP இனால் வெளியிடப்பட்டிருந்தது. இந்த IHP என்பது, தேர்தல் மற்றும் அரசியலுடன் எந்தத் தொடர்புமில்லாத ஒரு நிறுவனமாகும். அவர்களின் தேர்தல் கணக்கெடுப்பானது, “2023 டிசெம்பருக்குள் வாக்களிக்கும் எதிர்பார்ப்பிலுள்ள இலங்கையின் வயதுவந்தோர்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.

இருப்பினும், அவர்களின் கருத்துக் கணிப்பு முறை, பயன்படுத்தப்பட்ட மாதிரிகள் பற்றிய தெளிவான விளக்கம் இல்லை. IHP வாக்கெடுப்பின் இறுதி முடிவுகளின்படி, 39 சதவீதம் பேர் திசைகாட்டிக்கு வாக்களிப்பார்கள் என்றும், ஐமசவுக்கு 27 சதவீதமும், மீதமுள்ள 10 சதவீதம் மற்றும் அதற்கும் குறைவானது மற்ற அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுமென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சுகாதாரக் கொள்கைகளை ஆராய்வதில் பிராந்திய அனுபவமுள்ள ஒரு நிறுவனமாக அறிமுகப்படுத்தப்பட்ட IHP, இதுபோன்ற அரசியல் வேலைகளில் ஈடுபட விரும்புவதைத் தவிர, அதற்கான அவர்களின் திறமை உண்மையில் கேள்விக்குரியது.

அவர்களின் நிபுணத்துவம் மற்றும் நிறுவனத்தின் பொறுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில், தேசிய சுகாதாரச் சேவையின் சிக்கல்கள் மற்றும் மருந்துகளை வாங்குவதில் மேம்படுத்தப்பட்ட தரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் படிப்பது மிகவும் பொருத்தமானது.

ஆனால், அவர்கள் எந்தத் துறையிலும் தங்கள் தடங்களைப் பதிப்பர். எவ்வாறாயினும், அந்த சர்வே அறிக்கை வெளிவந்த பின்னர், திசைக்காட்டியைத் தோற்கடிக்க ஐமசவும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைய வேண்டும் என்ற கருத்து, தீவிரமாகச் சமூகமயமாகியுள்ளது.

இதற்கு சமாந்தரமாக, ஐமசவில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு சில பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. IHP கணக்கெடுப்பு மட்டுமின்றி, அதன் பிறகு பல கருத்துக் கணிப்பு அறிக்கைகள் வெளிவந்தன.

அவர்கள் அனைவரும் திசைகாட்டியே முன்னிலையில் இருப்பதாகச் சொன்னார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான், நேற்று முன்தினம் ஐமசவுக்கு சாதகமான கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. வாக்கெடுப்பின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அந்தவகையில், ஐமசவுக்கு 39 சதவீதம், திசைக்காட்டிக்கு 20 சதவீதம், மொட்டுக்கு 9 சதவீதம், ஐதேகவுக்கு 5 சதவீதம், SLNP-க்கு 5 சதவீதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைக்கொண்டு, ஐமகவினர் பெரும் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐதேகவுக்கு, 5 சதவீத வாக்குகள் மாத்திரமே கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி, மேலும் சில வேட்பாளர்களுக்கு, ஒரு சதவீத வாக்குகள் கிடைக்குமென்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அவற்றில் 24 சதவீதமானோர், தாங்கள் யாருக்கு வாக்களிப்பதென்ற இறுதி முடிவை இன்னும் எடுக்கவில்லை என்பது, சர்வேயில் காணக்கூடிய மிகவும் தனித்துவமான விஷயமாகக் காணப்படுகிறது. அதாவது, இதுவரை எந்த ஒரு வேட்பாளரும் 50 சதவீதம் மதிப்பெண்ணைத் தாண்டவில்லை.

அடுத்த முக்கிய காரணம் என்னவென்றால், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வாக்கெடுப்புகள் இதற்கு பெறப்படவில்லை. “வடக்கின் வாக்குகளை ஒதுக்கி வைத்துவிட்டு கிழக்கு மாகாணத்தைப் பற்றி பேசினால், அங்கு அதிகாரத்தில் இருக்கும் ரவூப் ஹக்கீமும், ரிஷாத் பதுர்தீனும், தற்போது சஜித்துடனேயே இருக்கிறார்கள்.

எனவே, வடக்கின் வாக்கு சதவீதத்தையும் கிழக்கின் மேற்குறிப்பிட்ட வாக்குச் சதவீதத்தையும் பெற்றால், சஜித்துக்கு 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் இலகுவாகக் கிமைக்குமென்று, மேற்படி கணக்கெடுப்பை நடத்தியுள்ள தரப்பு சொல்லாமல் சொல்லியிருக்கிறது. "IHP கணக்கெடுப்பு போலல்லாமல், இந்த கணக்கெடுப்பு அறிவியல் பூர்வமானது" என்று ஐமசவின் சமூக ஊடகங்களில் கருத்துப் பதிவுகள் இடம்பெறத் தொடங்கியிருக்கின்றன.

"100, 200 பேருக்கு ஃபோன் செய்து, நடத்திய கேலிக்கூத்தல்ல இது. மாகாணங்கள், மாவட்டங்கள், நகரங்கள், பாலினம், குழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள், வேலைகள் என அனைத்துக் குழுக்களையும் உள்ளடக்கியதாக, நான்காயிரத்து எண்ணூக்கும் மேற்பட்டவர்களிடம், மாதரி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது” என்று, ஐமசவினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த கருத்துக்கணிப்பின்படி, சஜித் தெளிவாக எல்லோரையும்விட முந்தியுள்ளார் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அது எதுவானாலும், இதற்கு முன்னர் வெளிவந்த கருத்துக் கணிப்புகளுக்குச் சொந்தக்காரர்கள் இருந்தார்கள். ஆனால், இம்முறை கணக்கெடுப்பு முறைகேடாக இருக்கிறது. அதற்கு சொந்தம் சொல்ல எவருமில்லை. அதனால் அது சந்தேகத்திற்குரிய விஷயமாகியுள்ளது.

தற்போது கிடைத்திருக்கும் தகவல்களுக்கமைய, ஐமச எம்பி ஒருவருக்குச் சொந்தமாக நிறுவனமொன்றுதான் இந்தக் கணக்கெடுப்பை நடத்தியுள்ளதென்று தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், அரசாங்கத் தரப்பிலிருந்தும், இன்னும் ஒருசில நாட்களில் மற்றுமொரு கணக்கெடுப்பு வெளியிடப்படவுள்ளதால். அதற்கான நடவடிக்கைகளில், ரணிலுக்கு ஆதரவான கூட்டணியொன்று ஈடுபட்டுள்ளதாம். அதாவது, அரசியலில் ஈடுபட்டிருக்கும் தரப்பினர், இம்முறை இந்தக் கணக்கெடுப்புக்களை வைத்துக்கொண்டுதான் முன்னேறப்போகிறார்கள் போலும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி