கொழும்பு பங்குச்சந்தை நாளை (01) முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வரையில் தொடர்ந்தும் மூடப்படும் இலங்கை பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள ஊடரங்குச சட்டத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் கொழும்பு பங்குச்சந்தை அதிகாரிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

இது குறித்து இன்று (31) கொழும்பு பங்குச் சந்தை திறக்கப்பட்டு அன்றாட செயற்பாடுகளை முன்னெடுப்பதா? இல்லையா என்பது குறித்து கலந்துரையாடப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 13 ஆம் திகதிக்கு பின்னர் 20 ஆம் திகதி மாத்திரம் கொழும்பு பங்குச்சந்தை திறக்கப்பட்டதாகவும் அதுவும் 2 மணித்தியாலங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அன்று கொடுக்கல் வாங்கல்கள் ஆரம்பித்தவுடனே விலை சுட்டெண் வீழ்ச்சியடைந்தன் காரணமாக நேற்று (30) வரை கொழும்பு பங்குச்சந்தையின் கொடுக்கல் வாங்கல்கள் இரத்துச்செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி