சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க> எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் மாளிகாகந்த நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப் படுத்தப்பட்டதையடுத்த, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் மருந்துக் கொள்வனவு தொடர்பில் அவர் நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து சமன் ரத்நாயக்கவிடம் 9 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க, இன்று பிற்பகல் கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டார். அதன் பின்னர் அவர், மஹர சிறைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில் சமன் ரத்நாயக்க, நேற்று (01) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

9 மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் நடத்திய விசாரணையின் பின்னர், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர், மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி