தமிழகத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ள சாந்தனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகத்தை

முற்றுகையிட்டுப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த போராட்டமானது, யாழ் மருதடி வீதியிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பு நாளை மறுதினம் 03.03.2024 காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

“இந்திய -திராவிட கூட்டுச் சதியால் பலியெடுக்கப்பட்ட சாந்தனிற்கு நீதி கோரி யாழிலுள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட இந்தியத் துரோகத்தை வேரறுக்க தமிழர்களாய் ஒன்றிணைவோம்” எனும் தொனியில் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதாதி 33 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த சாந்தன் 2022ஆம் ஆண்டில் விடுதலையானார்.

ஒன்றரை வருட போராட்டத்தின் பின் தமிழக அரசு இலங்கைகக்கு வர சாந்தனுக்கு அனுமதியளிக்கப்பட்ட போதும், உடல் நலக்குறைவால் சாந்தன் நேற்று முன்தினம் (28) உயிரிழந்தார்.

இந்நிலையில் இன்று (01) சாந்தனின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று, இறுதிக் கிரியைகள் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

24-65e1cf17a6c7d.jpeg

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி