தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனின் தாயார் கொழும்பில் நேற்று காலமான நிலையில்,

முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

கொழும்பு - தெஹிவளையில் அமைந்துள்ள தனது மகளின் இல்லத்தில் நேற்று மதியம் 1.30 மணியளவில் சுமந்திரனின் தாயாரான 85 வயதுடைய புஷ்பராணி மதியாபரணன் காலமானார்.

முதுகுத்தண்டு சத்திர சிகிச்சையின் பின்னர் கடந்த இரண்டு வருட காலமாக சுகயீனமுற்றிருந்த அவர், நேற்று காலமானார். இந்நிலையில், தெஹிவளையில் அமைந்துள்ள சுமந்திரனின் வீட்டிற்கு சென்ற  முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, சுமந்திரனின் தாயாராருக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதேவேளை தாயாரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

சுமந்திரனின் தந்தை, யாழ்ப்பாணம் - கரவெட்டியைச் சேர்ந்தவர் என்பதுடன் தாயார் குடத்தனை பிரதேசத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

mr_2.jpeg

 

mr_3.jpeg

 

mr_4.jpeg

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி