கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் BOI வாயிற்கதவுக்கு இன்று காலை வருமாறு பொலிஸாரினால் உத்தரவிடப்பட்டுள்ளனர். தற்போது தொழிலாளர்கள் பல மணித்தியாலங்களாக வைத்தியர்களின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.

வைத்தியர்கள் இவர்களது உடல்வெப்பநிலையை பரிசோதித்த பின் தங்களது வீடுகளுக்கு இராணுவ பேரூந்துகளில் அனுப்பப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரிசோதனைகளும் வாழ்வாதார சம்பளங்களும் இவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய மக்கள் தமது பாதுகாப்பிற்காக வீடுகளில் இருக்க

நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பான இந்த தொழிலாளர்கள் 2 மணித்தியாலங்களாக கூட்டமாக குழுமி நிற்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.

அனைத்து தொழிலாளர்களும் அழைக்கப்பட்டுள்ள போதிலும் அரசாங்கம் 500 தொழிலாளர்களை மாத்திரமே வீடுகளுக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்துள்ளது. பேச்சுவார்த்தைகள் நடக்க தொழிலாளர்கள் மேலும் காத்திருக்க வைக்கப்பட்டுள்ளார்கள்

அழைக்கப்பட்டு மூன்று மணித்தியால காத்திருப்பின் பின்னர் தொழிலாளர்கள் உடல் வெப்பநிலைக்காக பரிசோதிக்கப்பட்டு சம்பளம் இல்லாமல் கொரோனவிற்கு பரிசோதிக்கப்படாமல் வீடுகளுக்கு அனுப்படுகின்றார்கள். தொழிலாளர்கள் தமது கிராமங்களில் தாங்கள் கொரோனா தொற்றாளிகள் என்று ஒதுக்கப்படுவார்கள் என்று பயத்தில் உள்ளனர்

தொழிலார்கள் விட்டுச்செல்லும் பொருட்களுக்கு தாங்கள் பொறுப்பில்லை என்று வாடகை இருப்பிட உரிமையாளர்கள் கூறியுள்ளார்கள். தொழிலாளர்கள் மனிதர்களாக நடாத்தப்படாமல் அவர்களது சுகாதாரத்துக்கு பாதகமான முறையில் வீட்டிற்கு அனுப்பப்படுகின்றனர். பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் இந்த தொழிலாளர்களின் உயிர்களுக்கு பெறுமதி இல்லையா?

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களே இதுதான் உங்களது 'தொழிலாளர்களைப் பாதுகாப்பாக அனுப்ப போடப்பட்ட பெரும் திட்டமா?

கம்பனி உரிமையாளர்களே நீங்கள் இலாபம் திரட்ட மாத்திரமே தொழிலாளர்களின் உயிர்கள் உங்களுக்கு தேவைப்படுகின்றதா ? என்ற கேள்வி எழும்புகின்றது. 

 

 

 

 

 

 

 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி